பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், அதிகம் பேர் நூற்றுக்கு நூறு பெறுவது சிரமம். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளை விட, இந்தாண்டு கேள்விகள் எளிதாக இருந்தன.
தேர்வு குறித்து திண்டுக்கல் மாணவர்கள் கருத்து:
எஸ்.சிவானி (எஸ்.எம். பி. எம்., மேல்நிலைப் பள்ளி மாணவி, திண்டுக்கல்): கேள்விகள் எளிதாக இருந்தது. எதிர்பார்த்து சென்ற ஐந்து மதிப்பெண், பத்து மதிப்பெண் கேள்விகள் வந்திருந்ததால் விடையளிப்பது சுலபமாக இருந்தது.
இதனால் நேரம் போதவில்லை என்ற பிரச்னை எழுவில்லை. ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்தன. கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்புக்களை படித்திருந்ததால், பதில் அளிப்பதில் சிரமம் இல்லை.
நிலைமின்னியல், மின்னோட்டவியல், அணு இயற்பியல், அணு கரு இயற்பியல் ஆகியவற்றில் இருந்து அனைத்து மதிப்பெண்களிலும் கேள்விகள் வந்திருந்தது. பள்ளியில் ஏற்கனவே, தொடர் தேர்வு எழுதி பழகியதால் பதில் அளிக்க முடிந்தது.
எஸ்.பூபதி (அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி மாணவர், திண்டுக்கல்): ஒரு மதிப்பெண் கேள்விகள், மூன்று மதிப்பெண் கேள்விகளில் சில, சற்று சிரமமாக இருந்தன. இதற்கு பதில் அளித்திருந்தாலும், சரியான விடையா என்ற குழப்பம் உள்ளது.
இதில் முழு மதிப்பெண் பெறுவது என்பது அனைவருக்கும் சிரமம் தான். ஐந்து மதிப்பெண் கேள்விகள், 10 மதிப்பெண் பழைய கேள்விகள் வடிவில் கேட்கப்பட்டிருந்ததால் எளிதாக இருந்தது.
ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கேள்விகள் சிரமமாக இருந்ததால், இயற்பியலில் 100 சதவீத மதிப்பெண் பெறுவது சிரமம். அதே சமயம் அதிக மதிப்பெண் பெற முடியும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.