Pages

Sunday, March 3, 2013

ஆசிரியர் பயிற்சி தனிதேர்வு முடிவு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012 ஜூன் மாதம் நடந்த டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச் 2) அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் முடிவுகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கான மதிப்பெண் பட்டியல்கள் அரசு தேர்வு துறையிடமிருந்து பெறப்படவில்லை. மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் டிப்ளமோ சான்று பெறப்பட்டவுடன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.