Pages

Thursday, March 28, 2013

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாதாந்திர கட்டணம் உயர்வு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாதாந்திர கட்டணங்கள், வரும், ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும், டியூஷன் கட்டணங்களில், எவ்வித மாற்றமும் இல்லை.
ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, மாதாந்திர கட்டணமாக இருந்த, 290 ரூபாய், அடுத்த மாதம் முதல், 600 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 9ம் மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டணம், இப்போதுள்ள, 490 ரூபாயிலிருந்து, 800 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

வணிகவியல் மற்றும் கலைப்பிரிவில், பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின், தற்போதைய மாதாந்திர கட்டணம், 590 ரூபாயிலிருந்து, 900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதில், "இன்பர்மேஷன் பிராக்டிஸ்" பாடம் எடுத்து படிப்பவர்கள், கூடுதலாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

அறிவியல் பிரிவில், பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இப்போது செலுத்தும், 750 ரூபாய் கட்டணம், 1,000 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. "இன்பர்மேஷன் பிராக்டிஸ்" மாணவர்கள், கூடுதலாக, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

"கட்டண உயர்வு குறித்த விவரம், அனைத்து, கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டியூஷன் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, மாணவர்களுக்கு, முறைப்படி அறிவிக்கப்படும்; அடுத்த மாதம் முதல், மாற்றப்பட்ட கட்டணங்கள் அமலுக்கு வரும்" என, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் நிர்வாகமான, "கேந்திரிய வித்யாலய சங்காத்தன்" அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.