தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வித்திட்டம் 2010 – 2011 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கியது.
இத்திட்டத்திற்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 2010-2011 மற்றும் 2011–2012ஆம் கல்வி ஆண்டுகளில் இத்திட்டம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டது. 2012–2013ஆம் கல்வி ஆண்டு முதல் அரசே நேரடியாக இத்திட்டத்தை நடத்திவருகிறது. ஆனால் இத்திட்டம் தொடங்கப்பட்டு இது நாள் வரையிலும் இத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு எவ்வித சம்பளமும் வழங்கப்படவில்லை. மூன்றாண்டுகளாக சம்பளமின்றி சிறப்பு ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இவர்கள் கோரிக்கையை பரிசீலித்து சிறப்பு ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.