Pages

Saturday, March 2, 2013

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

பள்ளிகளில், மாணவியருக்கு எதிரான, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை களைத் தடுக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவது, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. இதைத் தடுக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக, ராஜ்யசபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசிதரூர் கூறியதாவது: பள்ளிகளில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளன. இதை தடுக்க, மாணவியருக்கு, உடற்கல்வி வகுப்பில், தற்காப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், கடந்த மாதம் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பல்கலைக்கழக மானிய குழு அதிரடி படை ஒன்றை அமைத்துள்ளது. மேலும், பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களுக்கான கல்வி தகவல் மையங்கள், நாடு முழுவதும், 158 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில், 85 தகவல் மையங்கள், பல்கலை அளவிலும், 76 மையங்கள் கல்லூரிகளிலும் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.