Pages

Saturday, March 2, 2013

கடையநல்லூர் கல்வி அலுவலரை கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டம்

கடையநல்லூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து நாளை (3ம் தேதி) அனைத்து இயக்க ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
கடையநல்லூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்தும், பெண் ஆசிரியைகளிடம் செல்போனில் பேசி மிரட்டுவதை கண்டித்தும், ஆசிரியர்களுக்குரிய ஊதியம் தவிர பிற பணப்பலன்களை வழங்குவதில் கையூட்டு எதிர்பார்த்து காலம் கடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் அனைத்து இயக்க ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாளை (3ம் தேதி) உண்ணாவிரதம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நகர தலைவர் சுடலை தலைமை வகிக்கிறார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் முருகையா முன்னிலை வகிக்கிறார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மருதுபாண்டியன் வரவேற்கிறார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பாபுவேலன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி, தமிழக ஆசிரியர் மன்றம் மாவட்டதலைவர் பால்துரை, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், தமிழக ஆசிரியர் மன்ற மாவட்ட பொருளாளர் செண்பக அருணாசலம், முத்துராமன், திரிகூடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். அனைத்து ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரதத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.