Pages

Saturday, March 16, 2013

இந்தியப் பெண்கள் ஆரம்பக் கல்வி பெறுவது முதல் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் பல அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் முதலானவற்றில் பெண்கள் சுமூகமாகக் கல்வி கற்க வாய்ப்பே குறைவாக உள்ளது. உங்களுக்குத் தெரியுமா எத்தனை பள்ளிகளில் பெண்களுக்குக்
கழிவறை வசதிகள் உள்ளன என்பது. அவ்வாறு இருந்தால் கூட அவை எந்தளவுக்கு வசதியாக உள்ளன என்பதை அறிவீர்களா. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்குப் போதிய வசதிகளைக் கல்விச் சாலைகள் செய்து கொடுப்பதில்லை. பல ஆசிரியர்கள் அவற்றைக் குறித்துப் புரிந்து கொள்வது கூட இல்லை. அது மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரிகளில் ஓர வஞ்சனைகளும், பாலியல் வன்முறைகளும் மிகுந்தே உள்ளன. சமயங்களில் இத்தகைய மன துன்புறுத்தல்களைப் பெண் ஆசிரியர்களே செய்வதும் கொடுமையான உண்மையாகும்.

இவ்வாறான நிலையால் தொடக்கப்பள்ளிகளில் கல்வி கற்காத பெண்களின் சதவீதம் வெறும் 2.4 % யில் இருப்பது. மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 17.9 % ஆக உயர்ந்து விடுகின்றது. அத்தோடு பருவம் எய்திய பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவும், பலரை வேலைகளுக்கு அனுப்பவும், இளம் வயதிலேயே மணம் முடித்து வைக்கப்படுவதும் கூட ஒரு காரணமாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.