டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடமுறையில், பொதுத்தமிழ் நீக்கம் செய்யப்பட்டிருப்பது, போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த போட்டித் தேர்வு ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள புதிய பாடத்திட்ட முறையில், குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ., குரூப், 4 தேர்வுக்கான, தமிழ் பாடத்துக்கான பொது தமிழ் பகுதியில், மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், குரூப், 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது, குரூப், 2 தேர்வு மற்றும் வி.ஏ.ஓ., தேர்வில், ஏற்கனவே பொது அறிவு பாடத்தில், 100 கேள்விகளுக்கு பொது தமிழ் பாடத்தில் கேட்கப்படும், 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) இதில், பொது தமிழ் பாடத்தில் கேட்கப்படும், 100 கேள்விகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
குரூப், 4 தேர்வில், ஏற்கனவே பொது தமிழ் பாடத்தில் கேட்கப்படும், 100 கேள்விகளுக்கு (150 மதிப்பெண்கள்) பதிலாக, 50 கேள்விகள் மட்டும் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட பாடதிட்டத்தில், வங்கி தேர்வு மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி., தேர்வு போன்று புத்திக்கூர்மை, சிந்தித்து விடையளிக்கும் திறன் கேள்விகள், பொது அறிவு, கிராம நிர்வாகம் (வி.ஏ.ஓ., தேர்வுக்கு) போன்ற பாடங்கள் இடம் பெற்றுள்ளது.
கிராம பகுதி மாணவர்கள், தமிழ் வழியில் போட்டி தேர்வுகளை எழுதி வருகின்றனர். அவர்கள், தினசரி நாளிதழ்களையும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களையும், கிராம பகுதி நூலகங்களில் கிடைக்கும் புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வு எழுதி வருகின்றனர்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கான பாட திட்ட முறையில், நகர் புறங்களில் படிக்கும் மாணவர்களில் பெருமளவில் பயனடைந்து தேர்ச்சி பெற வாய்புள்ளது. பொது அறிவு மற்றும் ஆங்கில புலமை பெற்று இருப்பதால், எளிதாக தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாட திட்டம், கிராம பகுதி மக்களை பெரிதும் பாதிக்கும். மாணவர்களின் நலன் கருதி, தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாட திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ReplyDeleteTamil kural valga....