Pages

Wednesday, March 20, 2013

ஒரே நாளில் 2 அரசுத் தேர்வு: மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்?

தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வும் ஒரே நாளில் நடக்கவுள்ளதால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு மையங்கள் ஒதுக்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு நடந்து வருகின்றன. மார்ச் 27ம் தேதி கடைசி தேர்வாக நர்சிங், புள்ளியல் மற்றும் தொழிற்கல்விக்கான "தியரி" தேர்வுகள் நடக்கின்றன. ஆனால், அதே தேதியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வும் நடக்கின்றது. இதனால், ஒருசில சிறிய மேல்நிலை பள்ளிகளில், இரு தேர்வுகளுக்கும் மையங்கள் ஒதுக்க, போதிய இடவசதி இல்லை.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இரு தேர்வுகளுக்கும், குறைந்தபட்சம் ஒரு நாளாவது இடைவெளி விட்டிருக்கலாம். சமூக அறிவியல், நர்சிங், புள்ளியியல் தேர்வுகளை குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே எழுதுகின்றனர். இதனால், 70 சதவீதம் தேர்வு மையங்களில் பிரச்னை வராது.

ஆனால், 30 சதவீதம் தேர்வு மையங்களில், இருப்பிட அளவை விட, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மையங்களில் எவ்வகையான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை, என்றனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. பல மையங்களில் இப்பிரச்னை ஏற்படாது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அருகே உள்ள பெரிய மையங்களில், கூடுதல் மாணவர்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.