Pages

Tuesday, March 12, 2013

2 ஒன்றியங்களில் ஊதியம் பெற முடியாமல் பள்ளி ஆசிரியர்கள் அவதி

பண்ருட்டி, அண்ணா கிராமம் ஒன்றியங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். பண்ருட்டி, அண்ணா கிராமம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் மாதஊதியம் சம்பந்தப்பட்ட கருவூலம் மூலம் சரிபார்க்கப்பட்ட அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நடப்பு நிதி ஆண்டிற்கான வருமானவரி ஆவணங்கள் பண்ருட்டி கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு காரணங்களால் பிப்ரவரி 2013க்கான ஊதியம் இன்னும் பெறமுடியவில்லை. தினந்தோறும் வங்கியில் சென்று தமது ஊதியம் வந்துள்ளதா என பார்த்தபோது வரவில்லையென தெரிந்ததால் ஏமாற்றமடைந்து சென்றனர். சாப்ட்வேர் பிரச்னையால் தற்போது புதிய சாப்ட்வேர்கள் ஏற்றப்பட்டதால் ரிசர்வ் வங்கி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து வங்கிகளும் ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிய வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.