10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு உரிய கேள்விகள் எளிதாக இருக்கும் வகையில் புதிய கேள்வி முறையை கல்வித்துறை வடிவமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவுள்ளனர். கணிதத் தேர்வு வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் கணிதத் தேர்வுக்கான வினாத்தாளில் கேள்விகள் கேட்கும் முறை எளிதாக அமையும் வகையில் மாணவர்களுக்குச் சாதகமாக மாற்றங்களை கல்வித்துறை செய்துள்ளது.
புதிய திட்டத்தின்படி "ஏ' பிரிவில் 1 மதிப்பெண் வழங்கப்படும் 15 கேள்விகளும் புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு கேள்வி மற்றும் புத்தக கேள்வியில் இருந்தே கேட்கப்படும்.
"பி' பிரிவில் 2 மதிப்பெண் கேள்விகளில், கிரியேட்டிவ் கேள்வியாகவும் கட்டாய கேள்வியாகவும் இருந்த 30-வது கேள்வி, இப்போது புத்தகத்தில் உள்ள கேள்வியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில், கேள்வி எண் 16 முதல் 29 வரை உள்ள 2 மதிப்பெண் கேள்விகளில் 2 கேள்விகள் கிரியேட்டிவ் கேள்விகளாகக் கேட்கப்படும்.
"சி' பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் கேள்வியாக இருந்த கேள்வி எண் 45, இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்கு பதில் 31 முதல் 44 வரை உள்ள கேள்விகளில் 2 கேள்விகள் கிரியேட்டிவ் கேள்விகளாகக் கேட்கப்படும்.
கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டு, இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலிருந்தும் கிரியேட்டிவ் கேள்விகள் கேட்கப்படும். இந்த புதிய கேள்வி வடிவமைப்பு காரணமாக இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும், "சென்டம்' வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இத்தகைய கேள்வி வடிவமைப்பு மாற்றங்கள் குறித்து கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கல்வித் துறை செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.