Pages

Tuesday, March 12, 2013

பத்திரப் பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்

பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
நில ஆவணங்கள் உள்ளிட்ட, பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர், தமிழக ஆவண எழுத்தர்கள் சட்டத்தின்படி, முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே அமலில் இருந்த வணிக வரித் துறை மற்றும் பதிவுத்துறை சட்டத்தில், திருத்தம் ஏற்படுத்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன், 10ம் வகுப்பு தேர்ச்சியும், 10ம் வகுப்பில் தமிழ் மொழி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில், கன்னியாகுமரி, நீலகிரி போன்ற கேரள எல்லை மாவட்டங்களில் உள்ள பலர், மலையாள மொழியை படித்து, மலையாள மொழியில் ஆவணங்களை எழுதி வந்தனர்.

தமிழில் ஆவணங்கள் எழுதும் பழக்கம் நடைமுறைக்கு வந்த பின், மலையாள மொழியை முதன்மை பாடமாக படித்தாலும், தமிழ் மொழி தேர்வு, கூடுதலாக எழுதி வந்தனர். தற்போது, "உரிமம் பெற விண்ணப்பிப்போர், தமிழ் மொழியை முதல் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ படித்து, 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.

பிப்., 15க்கு முன், உரிமம் பெற்றோர் அல்லது உரிமம் புதுப்பித்தோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணை, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.