ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிதம்பரத்தில் நடந்தது. மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிடக்கோரி மத்தியத்
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பு சார்பில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் சிற்றரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் அறிவழகன் வரவேற்றார். அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜீவானந்தம், மாநில முன்னாள் செயலர் குருசாமி, மாவட்டச் செயலர் கிறிஸ்டோபர் ஆகியோர் பொது வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்தனர்.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா, தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு முந்தைய வரையறுக்கப்பட்ட பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடருதல், ஓய்வூதிய நிதியில் 49 சதவீதம் அந்திய நேரடி முதலீட்டினை அனுமதிக்கும் முடிவினைக் கைவிடுதல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.