Pages

Wednesday, February 20, 2013

ஆதரவளிப்போம்... பணிக்கும் செல்வோம்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்

அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ஜான்வெஸ்லி வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. ஆனால், சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில், பங்கேற்க மாட்டார்கள்.

கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி பணிக்கு செல்வர். இவ்வாறு அறிக்கையில் ஜான்வெஸ்லி கூறியுள்ளார்.

"மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள, இரு நாட்கள் பொது வேலை நிறுத்தம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது" என, சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.