Pages

Monday, February 25, 2013

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மீண்டும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என வேலூரில் நேற்று நடந்த தமிழக தமிழாசிரியர் கழக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் 21ஆவது மாநில மாநாடு வேலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்க டேசன் வரவேற்றார். தொடக்க கல்வி இயக்குநர் ராமேசுவரமுருகன் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இணை இயக்குனர் (பதின்மப் பள்ளிகள்) கார்மேகம், அனைவருக்கும் கல்வி இடைநிலைக்கல்வி திட்டம் இளங் கோவன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை ஆசிரி யர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்த பட்ச பணிக் காலம் 30 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகள் என மாற்றி அமைத்து ஆணை வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர் தமிழில் இடம் பெற செய்ய வேண்டும்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில கல்வியை புகுத்த முனைப்புடன் செயல்படுகிறது. இது சிறந்த கல்வி முறைக்கு முரணானது என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.