Pages

Tuesday, February 19, 2013

மாணவர்களே தேர்வு பயமா?

பொதுத்தேர்வை எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, ஏதோ ஒருவித பயம், பதட்டம்  உண்டாகிறது. தேர்வு எழுதும் போது விடைகள் தெரிந்திருந்தாலும் பதட்டத்தினால் சரியாக எழுத முடியாமல் தோல்வியுறுகின்றனர்.

எதிர்மறையான எந்த சிந்தனைக்கும் மனதில் இடம் அளிக்க கூடாது. கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையை அறவே தவிர்ப்பது நல்லது. சக மாணவர்களுடன் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவர்களும் அவரவருக்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு படிக்க வேண்டும். பாடங்களை புரிந்து படிப்பது, தேர்வு நேரத்தில் படித்தவை மறக்காமல் நினைவில் நிற்க உதவும்.

ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் கூறும் ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்றினாலே, எளிதாக தேர்வை எதிர் கொண்டு வெற்றி பெறலாம். தேர்வு கூடத்திற்கு அவசர அவசரமாக செல்லாமல், முன்னதாகவே தேர்வு நடைபெறும் அறைக்கு சென்று ரிலாக்ஸாக இருக்கலாம்.  இவ்வாறு பின்பற்றினால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.