Pages

Wednesday, February 6, 2013

உதவி தொடக்கக் கல்வி அலுவலக பணியில் தொய்வு ஏற்படுவதாக புகார்

உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பிற அலுவலங்களைப் போல் உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும், 385 உதவி தொடக்க கல்வி
அலுவலகம் உள்ளது. அதில், ஒரு தொடக்க கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் உட்பட பல்வேறு நிலைகளில் அமைச்சுப்பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

அந்த ஊழியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஊதியம், சேமநல நிதி பிடித்தம் மற்றும் கடன் பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர். அனைத்து பணிகளும், பதிவேடுகள் மூலமே பராமரிப்பு செய்யப்படுகிறது. அதனால் பணியில் தொய்வும், காலதாமதமும் நேரிடுகிறது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். அதன்மூலம் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான உத்தரவை ஆன்லைன் முறையில் பிறப்பிக்க வேண்டும் என, தமிழக ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.