Pages

Saturday, February 16, 2013

கலெக்டர் ஆய்வின்போது பாடக்குறிப்பேடு சமர்ப்பிக்காத அரசுப்பள்ளி ஆசிரியருக்கு மெமோ

சேலம் மாவட்டம் சாத்தப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சரவணக்குமார் என்பவர் இயற்பியல் பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், சாத்தப்பாடி அரசுப்பள்ளியில் கடந்த 5ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அப்பள்ளி ஆசிரியர்கள் எழுதிய பாடக்குறிப்பேடுகளை ஆய்வு செய்தார். பாடக்குறிப்பேட்டை கொண்டு வரும்படி ஆசிரியர் சரவணக்குமாருக்கு உத்தரவிட்டார். குறிப்பேட்டை எடுத்து வருவதாக கூறிச்சென்ற ஆசிரியர் சரவணக்குமார், ஆய்வு முடியும் வரை கலெக்டரிடம் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, அரசு விதிகளுக்கு புறம்பாக தமது கடமையில் இருந்து தவறியதாகவும், அவர் மீது குடிமுறைப்பணி ஒழுங்குமுறை மற்றும் மேல் முறையீடு விதி 17 (ஏ)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலரிடம் கலெக்டர் புகார் அளித்தார். அதன்படி, ஆசிரியர் சரவணக்குமாருக்கு 17 (ஏ)-ன் பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன் மெமோ அளித்தார்.
அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் இதன் நகல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடுகளை எழுதும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, ஆசிரியர் சரவணக்குமார் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது, என்றார்.

1 comment:

  1. PRESENTLY TEACHERS ARE FACING SO MANY PROBLEMS TO HANDLE THE HIGHER CLASSES. TEACHERS ARE UNABLE TO FINISH THE LESSONS. SO, THEY ARE WORKING VERY HARD TO PREPARE THE STUDENTS FOR PRACTICAL AND THE PUBLIC EXAMINATION. IN THIS SITUATION HOW A TEACHER MAINTAIN A NOTES OF LESSON?. I REQUEST THE DISTRICT COLLECTOR AND THE C.E.O TO KEEP THE ABOVE POINTS IN THEIR MINDS BEFORE COME TO ANY CONCLUSION.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.