Pages

Monday, February 25, 2013

டி.இ.டி தமிழ் வினா - விடை: பாம்புகள்

*   விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

*   உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.
*   பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.

*   பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் குட்டிப்போடும்.

*   உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.

*   பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையை விழுங்கும், மென்று தின்பதில்லை.

*   பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.

*   பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.

*   52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.

*   பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.

*   சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

*   நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

*   பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்கு பாதுகாப்புச்   சட்டம் - 1972.

*  மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.

*  தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13

*  சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

*  தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30

*  தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12

*  தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18

*  உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216



இலக்கணம்:

*   உடனிலை மெய் மயக்கம்:

தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.

(எ.கா)  பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

*   வேற்றுநிலை மெய்மயக்கம்:

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்

எ.கா: சார்பு, வாழ்க்கை

*   எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.

எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.

*   உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.

*   ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.

*   மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.

*   மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்

*   வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.