Pages

Wednesday, February 27, 2013

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கு இழுத்தடிப்பு: ஆசிரியர் கூட்டணி நிர்வாகி புகார்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிகிச்சை பெற வசதியாக, அவர்களது ஊதியத்தில், மாதம், 150 ரூபாய் வீதம், எட்டு மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், அதற்கான அடையாள அட்டை வழங்காததால், அத்திட்டத்தில், ஆசிரியர்கள் பயன்பெற முடியாத சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து, தமிழக ஆசிரியர் கூட்டணி எருமப்பட்டி வட்டாரச் செயலாளர் ராமராசு கூறியதாவது:
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதற்காக, 2012ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதம், 150 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம், அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர்களுக்கு வழக்கப்பட்டது. அதில், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவை குறித்து பூர்த்தி செய்து வழக்கப்பட்டது. எட்டு மாதம் கடந்த நிலையில், அதற்கான அடையாள அட்டை மற்றும் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை.
எந்தந்த நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், என்ற விவரமும் ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் இதே நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவியிடம் கேட்ட போது, ""அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.

2 comments:

  1. அன்பான சகோதர சகோதரிகளி.. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

    என் பெரியதாயார் அவர்கள் நேற்றைய முன் தினம் இருசக்கர வாகணம் இடித்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தர்ப்போது மருத்துவர்கள் அரசு மருத்துவ காப்பீடு திட்ட அடையால அட்டை கேட்கின்றானர் ஆனால் அவரிடம் அட்டை இல்லை மேலும் குடும்ப அடையாள அட்டையும் இல்லை

    அவர் வோட்டர் அய்டி கார்ட், ஆதார் கார்ட் , போஸ்ட் ஆப்பீஸ் அய்டி கார்ட் வைத்துள்ளார். இதைவைத்து காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி என்றே புரியமல் திகைக்கின்றோம். ஆபரேஷன் செய்ய காப்பீட்டுஅட்டை அவசியம். தயவு செய்து விசாரித்து விரைவில் சொல்லவும். என்னுடைய போன் நம்பர் 9551323565.. நன்றி

    ‘ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32).

    ReplyDelete
  2. அன்பான சகோதர சகோதரிகளி.. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

    என் பெரியதாயார் அவர்கள் நேற்றைய முன் தினம் இருசக்கர வாகணம் இடித்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தர்ப்போது மருத்துவர்கள் அரசு மருத்துவ காப்பீடு திட்ட அடையால அட்டை கேட்கின்றானர் ஆனால் அவரிடம் அட்டை இல்லை மேலும் குடும்ப அடையாள அட்டையும் இல்லை

    அவர் வோட்டர் அய்டி கார்ட், ஆதார் கார்ட் , போஸ்ட் ஆப்பீஸ் அய்டி கார்ட் வைத்துள்ளார். இதைவைத்து காப்பீட்டு அட்டை பெறுவது எப்படி என்றே புரியமல் திகைக்கின்றோம். ஆபரேஷன் செய்ய காப்பீட்டுஅட்டை அவசியம். தயவு செய்து விசாரித்து விரைவில் சொல்லவும். என்னுடைய போன் நம்பர் 9551323565.. நன்றி

    ‘ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்’ (அல்குர்ஆன் 05:32).

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.