Pages

Sunday, February 3, 2013

தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

தொடக்கக் கல்வியில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட 5 இடங்களில், இப்பயிற்சி, பிப்.,4 முதல்18 வரை நடக்கிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் அதிகரிப்பால், அரசு தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்புக் கல்வியாண்டில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிர்வாக ரீதியில் செயல்படும், தொடக்கக் கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தரமான கல்வி, சேர்க்கையை அதிகரிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட 5 இடங்களில், இப்பயிற்சி, பிப்.,4 முதல்18 வரை நடக்கிறது. சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரசின் புதிய உத்தரவு பற்றிய பயிற்சியை அளிக்க உள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்க, சி.இ.ஓ.,(சிவகங்கை) ஜெயலட்சுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.