தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை(239) திருத்தம் செய்ய வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பு செயற்குழு கூட்டம் நேற்று கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கூட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் விஜயன் முன்னிலை வகித்தார். பரமசிவம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக அரசால் கடந்த 20.9.2012ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1978-79 கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட பி.டி., அல்லது பி.இ.டி.,முடிக்காத முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணிப்பலன், மற்றும் பணப்பயன்கிடைக்காமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த அரசாணையை திருத்தம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.