கச்சிராயபாளையம் அரசு பள்ளியில் வகுப்பறை, விளையாட்டு மைதானம் பகுதிகளை மாணவிகளே சுத்தம் செய்யும் அவல நிலை பெற்றோர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.கச்சிராயபாளையம் மலையடி வரதராஜ
பெருமாள் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் குப்பை கூளங்களை சுத்தம் செய்வதற்கு மாணவிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே மாணவிகள் தங்களுக்குள் ஷிப்ட் முறையில் விளையாட்டு மைதானம், வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளால் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 8 வருடமாக நானும் பல பேரிடமும், பல முறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கேட்டுப் பார்த்து விட்டேன். வகுப்பறைச் சுத்தம், பள்ளி வளாகச் சுத்தப் படுத்த வேண்டியது யார்? எந்த தெளிவான உத்தரவும் இது வரைப் பிறப்பிக்கப் படவில்லை. VEC மூலமும் முடிய வில்லை. ஊராட்சி மூலமும் முடிய வில்லை. அப்போ யார்தான் செய்வது? தலைமை ஆசிரியரா? அல்லது இதர ஆசிரியர்களா? யாராவது தெளிவு படுத்தினால் நனறாக இருக்கும்.
ReplyDelete