Pages

Saturday, February 23, 2013

பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம்

"உங்கள் பள்ளியில் அமெரிக்கா" என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், துவங்கியது.
இத்திட்டத்தின் மூலம், அமெரிக்க கலாச்சாரம், சமூகம், அரசியல், கல்வி ஆகியன குறித்து, தூதரக அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடுகின்றனர். திட்டத்தின் துவக்க விழா, சென்னை, செம்பாக்கம், ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

அமெரிக்காவின், பன்முக கலாச்சாரம் மற்றும் அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் என்பது குறித்து, தூதரக அதிகாரி கிரிஸ் அரவிந்த், மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தை பயன்படுத்த விரும்பும் பள்ளிகள், chennaipasprograms@state.gov என்ற இணையதள முகவரியிலும், 044-28574208, 044- 28574033 என்ற தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம் என, அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.