Pages

Thursday, February 14, 2013

பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆறாவது ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்ட மூன்று
நபர் குழுவின் அறிக்கையை உடன் வெளியிட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, முந்தைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். பதவி உயர்வின்போது, இரண்டு ஊதிய உயர்வுகள் வழங்க வேண்டும்.
வணிகவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கும், அகமதிப்பீடு முறை அமல்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் வரும், மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்வு பணிகளை பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.
இச்சங்க கோரிக்கையை ஏற்று, பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தம் பணிக்கான மதிப்பூதியத்தை அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வழங்க ஆவணம் செய்த, ஈரோடு சி.இ.ஓ.,க்கு நன்றி தெரிவிப்பது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில துணைத்தலைவர் மாணிக்கம், மகளிரணி செயலாளர் சொர்ணமீனா, மாவட்ட பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.