Pages

Saturday, February 23, 2013

முதன்மை தேர்வில் 66 மனிதநேய மைய மாணவர்கள் தேர்ச்சி

மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில், சைதை துரைசாமி மனித நேய பயிற்சி மையத்தில் படித்த, 68 மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
இந்த முதன்மைத் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும், நேர்முகத் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள், இலவசமாக தொடர்ந்து நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற, மாணவ, மாணவியர்கள், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன், இன்று முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு, நேர்முகத் தேர்விற்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மனிதநேய அறக்கட்டளை, இந்த தகவலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.