வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
மீதம் உள்ள, 185 பணியிடங்களை நிரப்ப, நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள் விவரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்படாது. இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.