தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அறிவியல் பாடத்திற்கான கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தன. தற்போது, பொதுத்தேர்வு நெருங்குவதால், மற்ற பாடங்களுக்கான கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் எல்லா பாடத்திற்கும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, இணையதளத்தில் வெளியிட கல்வித்துறைக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால், பிப்., 20ல் சி.இ.ஓ.,க்கள் தலைமையில், மீண்டும் புதிய பாடத்திட்டத்திற்கான கருத்துக்கேட்பு நடக்கிறது.
இதுபற்றி கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இணையதளத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டங்கள் வெளியாகின. இதில், மாற்றம் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதற்காகவே, மீண்டும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, ஒட்டு மொத்தமாக அனைத்து பாடங்களுக்கும் உரிய புதிய பாடங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.