மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ,
மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ்
வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே,
ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,
பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன. மொத்தம், 8 லட்சத்து, 4,534
மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர். மாணவர், 3 லட்சத்து, 73 ஆயிரத்து,
788 பேரும்; மாணவியர், 4 லட்சத்து, 30 ஆயிரத்து, 746 பேரும் எழுதுகின்றனர்.
மாணவரை விட, மாணவியர், 56 ஆயிரத்து, 958 பேர், கூடுதலாக எழுதுகின்றனர்.
மொத்த மாணவ, மாணவியரில், 69.60 சதவீதம் பேர், தமிழ் வழியில், அனைத்து
தேர்வுகளையும் எழுதுகின்றனர். மாணவர், 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 903
பேரும்; மாணவியர், 3 லட்சத்து, 8,061 பேரும், தமிழ் வழியில், தேர்வை
எழுதுகின்றனர். மொத்தத்தில், 5.59 லட்சம் பேர், தமிழ்வழியில், தேர்வை
எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில் தேர்வை
எழுதுகின்றனர்.
ஆங்கில வழியில், 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 570 பேர் எழுதுகின்றனர். அரசு
வேலை வாய்ப்புகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட
ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு, நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 69 சதவீதம்
பேர், தமிழ் வழியில், பிளஸ் 2 தேர்வை எழுதுவது, எதிர்காலத்தில், அவர்கள்,
அரசு வேலை வாய்ப்புகளில் சேர, ஒரு கூடுதல் தகுதியாக இருக்கும்.
தட்டச்சர், இளநிலை உதவியாளர் போன்ற, குரூப்-4 நிலையிலான அரசுப்
பணிகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி இருந்தாலே போதும். இந்த மாணவ,
மாணவியர் அனைவரும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும், தமிழ் வழியில்
எழுதியிருப்பர். மேலும், பிளஸ் 2 தகுதி நிலையில், அரசு வேலை வாய்ப்புகளைப்
பெறவும், தமிழ் வழி கல்வி, உதவியாக இருக்கும்.
ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர்,
மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு
என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை நகரில், 406 பள்ளிகளில் இருந்து, 51 ஆயிரத்து, 531 பேரும்,
புதுச்சேரியில் 107 பள்ளிகள் சார்பில், 12 ஆயிரத்து, 611 மாணவ, மாணவியரும்,
பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.
சென்னையில், 140 மையங்களும், புதுச்சேரியில், 30 மையங்களும்
அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரி சேர்த்து, 2,020 மையங்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வு மூலம், 48 ஆயிரத்து, 788 பேர்
எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.