Pages

Monday, February 18, 2013

குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி

சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.
மனிதநேயம் பயிற்சி மையம், சமுதாயத்தில் ஏழை, எளிய பொருளாதாரத்தில், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த படித்த பட்டதாரிகளுக்கு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வருகிறது.

இதன் மூலம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, பல்வேறு பதவிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்-1, குரூப்-2 பதவிகளுக்கும், 2,125 பேர் தேர்வு பெற்று, தேசிய அளவிலும், மாநில அளவிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, நவம்பர் 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-2 தேர்வில், மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற தேர்வர்களும் பங்கேற்றனர். தேர்வு முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

இதில், மனிதநேய மையத்தில் படித்த, 517 பேர் தேர்வு பெற்றுள்ளனர். எழுத்து தேர்வில் தேர்வு பெற்றுள்ள இவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.