Pages

Friday, January 18, 2013

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு - அதிர்ச்சி தகவல் - Dinamalar

அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் சொல்லி கொள்ளும் அளவிற்கு உள்ளதாகவும் சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்வி தரம்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களில் 10 ல் 5 கிராமப்புற மாணவர்களுக்கு எளிய கணக்குகளை கூட போட தெரியவில்லை என ஆய்வு அறிக்கை கூறுகிறது. நாட்டின் கல்வி தரம் குறித்து மிகப் பெரிய கேள்விக்குறியை ஆண்டு கல்வி அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையின்படி 2010ல் பாதிக்கும் மேற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 2ம் வகுப்பு பாடங்களை படிக்கும் அளவிற்கே திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

2012ம் ஆண்டு இந்த அளவு 46.8 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், 2010ல் 50.7 சதவீதமாக இருந்த மாணவர்களின் படிக்கும் திறன் 2012ல் 41.7 சதவீதமாக குறைந்துள்ளது.

அமைச்சர் தகவல்: விரிவான விளக்கங்கள் மற்றும் தெளிவான கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குறைபாடே அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவதற்கான காரணம் என கூறப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.எம்.பல்லம் தெரிவித்துள்ளார். கூடுதல் சுமையை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்ப‌தற்கே இவ்வாறு நடைபெறுவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வு அர்த்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் 3 ஆண்டுகளுக்க ஒரு முறை புள்ளி விபரம் மற்றும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், அதில் நாட்டின் கல்வி தரம் சிறப்பாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு அறிக்கை: நாடு முழுவதும் 567 மாவட்டங்களில் உள்ள 3 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிக்கும் திறன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையின்படி, 5ம் வகுப்பு படிக்கும் 10 ல் 7 குழந்தைகளுக்கு சாதாரண இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை என தெரிய வந்துள்ளது.

2010ல் 70.9 சதவீதமாக இருந்த மாணவர்களின் கல்வி தரம் 2012ல் 53.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை கணக்குகள் குறித்த கல்வி அறிவு திறன் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

அரசு நிலைப்பாடு: கல்வி தரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டை கணித ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது அனைவரையும் குழப்பத்தில் ஆய்த்தி உள்ளது. கல்வி தரம் மற்றும் அதற்கான விதிமுறைகள் 2010ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின்படி கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான பள்ளி குழந்தைகள் குறைந்தபட்சம் மூன்றாம் தரத்திற்கும் கீழாகவே உள்ளனர்.

அதே சமயம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் தர அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.