தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 6வது ஊதியக்குழு கடந்த 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. 1.1.2007 முதல் கணக்கிட்டு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படும். நிலுவைத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஊதியக்
குழுவில் பல்வேறு துறைகளுக்கு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின. ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. இதிலும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இடையே திருப்தி ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது. பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்த மூன்று நபர் குழு, கடந்த ஜூலை 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக 240க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றன.
அப்போது, இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியம் 5200 & 20200, தர ஊதியம் 2800 பே பாண்ட் 1 ஆக உள்ளது. இதை பே பாண்ட் 2 ஆக மாற்றி 9300 & 34,800 தர ஊதியம் 4,200 வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ஊதிய முரண்பாடுகளை களைதல் குழுவின் அறிக்கை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குழுவின் பதவிக்காலம் கடந்த அக்.31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. பதவிக்காலம் முடிந்து 3வது மாதம் பிறந்து விட்ட நிலையில் தமிழக அரசிடம் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் கயத்தாறு, பொதுச் செயலாளர் இசக்கியப்பன், துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கூறுகையில், "ஊதிய முரண்பாடுகள் குழு தனது அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பித்து ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்", என்றார்கள்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.