Pages

Sunday, January 13, 2013

அரசு விழாவில் மாணவர்களை காக்க வைத்த அதிகாரிகளுக்கு குட்டு

சிவகங்கை முத்துப்பட்டியில் அரசு ஐ.டி.ஐ.,கட்ட திறப்பு விழா நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசுவதற்கு, மதியம் 2.30 மணி ஆனது. இங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் நிறைய பேச
வேண்டும் என, கருதிய அவர், மதிய சாப்பாட்டுக்கு நேரமாகி விட்டதால், மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டதா என, அதிகாரிகளிடம் கேட்டார்.

இதற்கு இல்லை என்ற அதிகாரிகளின் பதிலால் கோபமுற்ற அமைச்சர், அதிகாரிகளை கடிந்து கொண்டார். உடனே டீ, பிஸ்கட் கொடுக்க உத்தரவிட்டார். இது பற்றி எதுவும் யோசிக்காமல் இருந்த அதிகாரிகள், டூவீலர்களில் மாணவர்களை அனுப்பி, டீ,பிஸ்கட் வாங்கி வந்து, பசியோடு இருந்த மாணவர்களுக்கு கொடுத்தனர்.

விழாவில் 108 மாணவர்களுக்கு இலவச சைக்கிள், ரூ.6.50 லட்சத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பைக், 224 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதேபோல் மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த விழாவில், 786 மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் கோகுல இந்திரா வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.