Pages

Monday, January 21, 2013

பள்ளிக்கு ஆசிரியர்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து வரக்கூடாது : சி.இ.ஓ. அறிவுரை

பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஜீன்ஸ் பேன்ட், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரக்கூடாது என புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற 18,000 பேர்களுக்கு ஆன் லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணையை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 596 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறை, பாடத்திட்டம் குறித்த நிர்வாக பயிற்சி முகாம் ஜனவரி 19, 20ம் தேதிகள் என இரு நாள்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கிய இப்பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி பேசியது:

மாவட்டத்திலுள்ள 509 அரசு பள்ளியில் பணிபுரியவுள்ள நீங்கள், மாணவர் கல்விக்கு முழுப்பொறுப்பை ஏற்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர் மீது குறை கூறக்கூடாது. பள்ளிக்கு ஆசிரியை, ஆசிரியர்கள் சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்டுகளை அணிந்து வரக்கூடாது. ஆசிரியர்கள் சட்டையில் பட்டன்களை முறையாக போட வேண்டும்.

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க பாடுபட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.