Pages

Thursday, January 31, 2013

செயல்வழிக் கற்றல் முறையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

செயல்வழிக் கற்றல் முறை யால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் எருமப்பட்டி வட்டார கிளை செயலாளர் ராமராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
கடந்த 2007ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை இல்லை. குறிப்பிட்ட நிலையை மாணவர்கள் கடந்தால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்ல முடியும். இதன்மூலம் மாணவர்களது வாசிப்பு திறன் குறைந்தது. இது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்ப டுத்தியது.
அதனால், கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர். தற்போது, புத்தக வழிமுறை இருந்தாலும் செயல்வழிக் கற்றல் உபகரணங்களும் துவக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இது துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன், கிராமப்புற பள்ளியில் மாணவர்களுக்கு மருத் துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த நடைமுறை இல்லை. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். மேல்நிலை வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழிற் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.