Pages

Tuesday, January 22, 2013

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு

தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பல்வேறான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 22.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1 முதல் 12ம் வகுப்பு வரை, 13.67% சேர்க்கை
விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டில், 20.3 கோடி மாணவர்களே பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பள்ளி சேர்க்கை விகிதம் 19.1% அதிகரித்துள்ளது. சேர்க்கை விகிதங்கள் இவ்வாறு இருக்க, கிராமப்புற பள்ளிகளில், ஐந்தில், ஒன்றுக்கு குடிநீர் வசதியில்லை. பத்தில், 3 பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியில்லை. ஏறக்குறைய பாதி பள்ளிகளில், விளையாட்டு மைதான வசதியில்லை.

அதேசமயம், இவற்றில் பல சிக்கல்களும் உள்ளன. பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது என்றும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.