Pages

Tuesday, January 8, 2013

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கல்வித்துறை அலுவலர் தலைமையில் குழு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

ஆசிரியர்களின் குறைகளை தீர்ப்பதற்கு கல்வித்துறை அலுவலர் தலைமையில் குழு அமைக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் சின்னையா அம்பலம், மாவட்டச் செயலாளர் மோகன், ஆங்கில மொழியாசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சேவியர், தமிழாசிரியர் கழக மாநிலத் துணைச் செயலாளர் இளங்கோ, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் சங்கர் உள்ளிட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நேற்று சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களின் குறைகளையும், பிரச்னைகளையும் தீர்க்க அடிக்கடி குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும். இதற்காக கல்வித்துறை அலுவலர் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்க வேண்டும்.
மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிப்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள் வற்புறுத்தும் போது ஆசிரியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டமிட்டு ஆசிரியர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நிலையை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.