Pages

Friday, January 18, 2013

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அனைவருக்கும்
கல்வி இயக்ககம் சார்பில், பல்வேறு கலை இலக்கிய போட்டிகள்  நடக்க உள்ளன. இதில், ஒன்று முதல் எட்டு வகுப்புகள் ஒரு பிரிவாகவும்; ஒன்பது முதல், 10 வகுப்புகள் வரை, ஒரு பிரிவாகவும்; 11 மற்றும் 12 வகுப்பு வரை, ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் படுவர். இதில், ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, முறையே, 500, 300, 200 ரூபாயும்; மாவட்ட அளவில், 5,000, 3,000, 2,000 ரூபாயும்; மாநில அளவில், 20 ஆயிரம், 10 ஆயிரம், 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

பள்ளி அளவிலான போட்டிகள், இம்மாதம், 21 முதல், 25 வரையிலும்; ஒன்றிய அளவிலான போட்டிகள், 28 முதல், 30 வரையிலும்; மாவட்ட அளவிலான போட்டிகள், பிப்., 2 முதல், 6 வரையிலும் நடக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.