பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை என்ற லட்சியத்தை அடைய போராடுவோம் என்று பெற்றோர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பொதுப்பள்ளிக்கான பொங்கல் விழா சென்னையில் ஜன.,13ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தனியார் பள்ளி
மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் திரளாகப் பங்கேற்று பொதுப்பள்ளிக்காகப் பொங்கலிட்டனர். இதில் பெற்றோர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:
தனியார் பள்ளிகள் உருவாக்கிய ஆசையிலும், எதிர்பார்ப்பிலும் மயங்கி குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தனியார் பள்ளிகளில் அவர்களைச் சேர்த்தோம். அரசுப் பள்ளிகளைத் தரமாக நடத்த அரசை வலியுறுத்துவதற்குப் பதிலாக தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தது தவறு என்பதை உணர்கிறோம்.
அரசின் முழுப் பொறுப்பிலும் செலவிலும் அருகமையில் தாய்மொழி வாயிலாக பொதுப்பள்ளிகள் மூலம் கல்வி கிடைத்திடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை என்ற லட்சியத்தை அடையும் வரை தளராமல் போராடுவது எனவும், இதற்காக ஆசிரியர்-மாணவர்-பெற்றோர், ஜனநாயக அமைப்புகள் நடத்தும் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்வது என உறுதியேற்கிறோம்.
குழந்தை பிறப்பு முதல் பதினெட்டு வயது வரை அல்லது மழலையர் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் அருகமையில் உள்ள பொதுப்பள்ளிகள் மூலம் கல்வி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இந்த விழாவில் நிறைவேற்றப்பட்டன.
பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுக்கும் வகையில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்த வேண்டும், காவல் நிலையங்களில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியரிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் செ.அருமைநாதன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.