Pages

Tuesday, January 8, 2013

பொங்கல் பரிசு அறிவிப்பு வரவில்லை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் - Dinamalar News

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு வராததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக 3,500 ரூபாயும், ஏ, பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசாக
1,500 ரூபாயும் வழங்க வேண்டும். கடந்த ஆண்டை பொறுத்தவரை ஜனவரி மாதம் 2ம் தேதி பொங்கல் பரிசுக்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பரிசுக்கான அரசு ஆணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக பொங்கல் பரிசுக்கான அரசாணையை அரசு வெளியிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராஜ மார்த்தாண்டம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஆறுமுகதாஸ், கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ், அகஸ்டின் ராஜன், செல்வ சுந்தர்ராஜ், மாநில தணிக்கையாளர் பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.