Pages

Friday, January 18, 2013

அடிப்படை வசதிக்கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பழைய அரசு பெண்கள் பள்ளியில் கல்லூரி
செயல்படுவதால் போதிய இடவசதியில்லாமல் அவதியடைகின்றனர். அடிப்படை வசதிகள், லேப்டாப் மற்றும் பஸ்வசதி கேட்டும், பேராசிரியர்களை நியமிக்கக் கோரியும் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இயற்பியல் பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லாததால் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் தங்கதுரை கூறுகையில், "மாணவர்களின் போராட்டங்கள் குறித்து அவ்வப்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி கேட்டு கடந்த டிசம்பர் 17ம் தேதியும், லேப்டாப் வழங்க வேண்டி கடந்த 28ம் தேதியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும். மாணவர்கள் புரியாமல் போராட்டம் நடத்துவது வேதனையளிக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.