Pages

Wednesday, January 30, 2013

பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் முதல்வர் ரங்கசாமி வேதனை

மாணவர்களுக்கான திட்டங்கள் நிறுத்தப்பட மாட்டாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார். கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில், அவர் பேசியதாவது:
பொதுத் தேர்வில் தனியார் பள்ளிகளுக்கு சமமான வெற்றி பெறுகிறோம். ஆனாலும் சில அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 5 மாணவர்கள் தான் உள்ளனர். நல்ல தரமான ஆசிரியர்களைத்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கிறோம். இருந்தாலும், இது போன்ற நிலை ஏற்படுவது ஏன் எனத் தெரியவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல முறை என்னைச் சந்தித்து, எப்போது நியமனம் செய்யப் போகிறீர்கள் எனக் கேட்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுடன் பேசுகையில், 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எப்படி நியமிப்பது என கேட்கின்றனர். இது, மிக சங்கடமாக உள்ளது.மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்களை எப்படி நியமிப்பது. நமக்காகத்தான் அரசு இவ்வளவு செலவு செய்கிறது என நினைத்து, பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்போமா. இருந்தாலும், விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
முதல் தரமான ஆசிரியர்களை நியமித்து, கட்டடம் உள்ளிட்டஅனைத்து வசதிகளுடன் பள்ளிகளை அமைத்து, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறோம். இருந்தாலும் சில பள்ளிகளில் மிகக் குறைவான மாணவர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் குறைவாக உள்ள இரு பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடலாமா என, அதிகாரிகள் கேட்கும் நிலையும் உள்ளது. இதற்குக் காரணம், பெற்றோர்
களிடம் உள்ள தனியார் பள்ளி மோகம் தான்.
பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்பட மாட்டாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் உள்ள இலவச சைக்கிள் மிக விரைவில் வழங்கப்படும்.
கதிர்காமம் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கட்டடம் கட்டித் தரப்படும்.இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.