Pages

Friday, January 4, 2013

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது?

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வ மற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட
உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகிஇருந்தது.மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன் ஓட வருமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல தகுதித்தேர்விற்கு தயாராகி வருவதுதான் உத்தமம்...

2 comments:

  1. I have attend the B.T Post appointment Certificate verification on 13.05.2010.Then no any reply from Government. What I do next. Please give the correct guidence.

    A.Balasundaram
    BSc.B.Ed.(Physics)

    ReplyDelete
  2. I completed B.Lit-Tamil in the order of 10th three years Diploma and B.Lit., also pursuing TPT tamil university throu DDE. am i eligible to write TET-Paper-II
    Ramesh
    Sivagangai

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.