Pages

Wednesday, January 30, 2013

பள்ளிகளில் தீ தடுப்பு கருவி:அமைக்க கல்வித்துறை வலியுறுத்தல்

பள்ளிகளில் தீ தடுப்பு கருவி அமைத்து பள்ளி வாகன பராமரிப்பு ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள்
பொருத்த வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதனை பல பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் திடீரென தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதனை உடனடியாக அணைக்க முடியவில்லை. இதன் காரணமாக தீ விபத்தின் பாதிப்பு அதிகமாகி விடுகிறது. அதே போல பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி வைக்க வேண்டும் என கூறப்பட்டாலும் அதுவும் சரிவர பின்பற்றப்படுவதில்லை.இதனால் பள்ளிகளில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் கநன் கருதி பள்ளிகளிலும், பள்ளி வாகனங்களிலும் தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் முறையாக வைக்கப்பட்டு அவை நடைமுறையில் பராமரிக்கப்பட்டு வருவதை தீயமைப்பு சேவை கூட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கையை பள்ளிக் கல்வி துறை செயலருக்கு அனுப்பப்பட இருக்கிறது. இதனால் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை முக்கியத்துவம் பற்றியும், பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்பட வேண்டியதவ் அவசியம் பற்றியும் விளக்கிட வேண்டும்.தீ சேவை கூட்டமைப்பின் ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்க பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும். இவ்வாறு கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.