Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 20, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18
    ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது", என்றார்.

    No comments: