அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த கல்விக்கு இது அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என, இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசினார்.சென்னிமலை ஸ்ரீராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா,
கல்லூரித் தாளாளர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றதுவிழாவில், நெல்லை கண்ணன் பேசியது:இப்போதைய சமூக வாழ்க்கையில் மனிதர்களைச் சுற்றிலும் பல்வேறு தீமைகள் நிறைந்து கிடக்கின்றன. இவைகளில் இருந்து தப்பித்து வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அன்பு, உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நல்ல பழக்கங்களை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலமாக தவறான பழக்கங்கள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். தாய், தந்தையரை மதிப்பதும், ஆசிரியரிடம் பணிவு கொள்வதும் சமூகத்தில் மதிப்பையும், வாழ்க்கையில் உயர்வையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்ய மாணவப் பருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியைச் சுமையாக நினைக்காமல் வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைக்கவேண்டும். அதிகாலை நேரத்தில் கற்கும் கல்வி, ஆழ்மனதில் நிரந்தரமாகப் பதியும். அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றார்.சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்க துணை இயக்குநர் பி.எம்.கவிமணி, எம்.பி.எம்.ஜெ. பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், குமாரவலசு ஊராட்சித் தலைவர் சத்தியபாமா, ஸ்ரீராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஷோபனா ராஜன், பொருளாளர் செந்தில், முதல்வர் நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.