Pages

Wednesday, January 16, 2013

அரசு பள்ளிகளில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்: தடுக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றுச்சுவரும், இரவு காவலரும் இல்லாததால் இரவு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.நகரப்பகுதிகளை விட,
கிராமப்புறங்களில் அதிகளவில் பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளின் பெரும்பாலான கட்டடங்கள்,போதிய பராமரிப்பின்றி உள்ளன. சில பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது.
பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும், வெளியாட்கள் உள்ளே நுழைந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு காவலர் இல்லாததால், பள்ளிகளுக்குள் நுழையும் வெளியாட்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. விடுமுறை முடிந்து பள்ளி திறந்தால், வளாகம், வகுப்பறைகள் முன் மதுபாட்டில்கள், சிகரெட் துண்டுகள் காணப்படுகின்றன. இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாவதுடன், தாங்களே அவற்றை சுத்தம் செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இந்த அவலநிலையை தவிர்க்க, தற்போது எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுச்சுவரின் அளவு குறைவாக இருப்பதால், சமூக விரோதிகள் பள்ளிக்குள் நுழைவதை கட்டுபடுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
"அரசு பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதை தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. கிராமப்புற பள்ளிகளை பொறுத்தவரை, அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் மூலம்தான் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதை தடுக்க அங்கிருப்பவர்களே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.