Pages

Saturday, January 19, 2013

அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம்

பாழடைந்து அபாயகரமாக உள்ள அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மிகவும் மோசமான மையங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள், 50 சதவீதத்திற்கு மேல் பாழடைந்த கட்டடங்களில் மேற்கூரை இடிந்து, பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுகின்றன. இந்நிலையில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், நாற்காலி, மேஜைகள், அனைவருக்கும் கல்வி திட்டத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளன. மற்ற பணிகள் செய்வதற்கு, இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மையங்களில் கழிப்பறை வசதிகூட சரியில்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கட்டட சீரமைப்பு பணியை தற்போது உள்ளாட்சி நிர்வாகம் மூலமே ஏற்படுத்தி வருகின்றனர். இதுவும் நிதியின்மை காரணமாக, பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்படவில்லை.

அதிகாரிகள் ஆய்விற்கு வரும்போது, பொறுப்பாளர்கள் மையத்தின் நிலையை எடுத்து கூறியும், நடவடிக்கை இல்லை. மிகவும் மோசமான கட்டடங்களை மட்டும் அவசர தேவைகருதி சீரமைத்து வந்தனர்.

இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு 5 லட்ச ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மிகவும் மோசமான மையங்கள் கண்டறியப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படும், என அங்கன்வாடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.