TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடிசெய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு
வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர்பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.