Pages

Monday, January 28, 2013

முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தையின்போது ஒத்துக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விக்கும் 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நாடாளுமன்றம் முற்றுகை: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாநில பொது செய லாளர் ரங்கராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியது:பள்ளி கல்வியை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சங்கத்துடன் இணைந்து வரும் ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் பாராளுமன்றம் முன் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.